தீக்குச்சி மரம்
தீக்குச்சி மர இலை உண்ணும் புழு – எலிக்மா நார்சிஸஸ்
பூச்சியின் விவரம்
- புழு மஞ்சள் நிறத்தில் கருப்பு பட்டையுடன் இருக்கும்.
- தாய் அந்துப்பூச்சி நடுத்தர அளவு கொண்டது. முன்னிறக்கைகள் சாக்லேட் பழுப்பு நிறத்திலும், மத்தியில் வெள்ளைப்பட்டையுடனும், ஓரங்களில் கருப்பு புள்ளிகள் கொண்டும் இருக்கும்.
- பின்னிறக்கைகள் மஞ்சள் நிறத்திலும், வெளிப்புற ஓரத்தில் மூன்றில் ஒரு பங்கு கருப்பு பட்டையுடனும் இருக்கும்.
சேத அறிகுறி
- புழுப்பருவம் சேதத்தை ஏற்படுத்துகிறது
- இலை முழுவதையும் உண்ணும்
மேலாண்மை
- மாலத்தியான் மருந்தை லிட்டருக்கு 1 மி.லி. என்ற அளவில் தெளிக்கவும்.
தீக்குச்சி மர இலை பிணைக்கும் புழு – அட்டிவா ஃபேப்ரிசியெல்லா
தீக்குச்சி மர இலை பிணைக்கும் புழு – அட்டிவாஃபேப்ரிசியெல்லா
பூச்சியின் விவரம்
தாய் அந்துப்பூச்சி மஞ்சள் நிறத்திலும், முன்னிறக்கைகளில் அடர் புள்ளிகள் கொண்டுமிருக்கும்.
சேத அறிகுறி
- புழுப்பருவம் சேதத்தை ஏற்படுத்துகிறது.
- இலைகளையும், குருத்துகளையும் பிணைக்கும்
மேலாண்மை
- மாலத்தியான் மருந்தை லிட்டருக்கு 1 மி.லி. என்ற அளவில் தெளிக்கவும்.
|
தீக்குச்சி மர இலை உண்ணும் புழு |
 |
 |
புழு |
அந்துப்பூச்சி |
 |
சேத அறிகுற |
தீக்குச்சி மர இலை பிணைக்கும் புழு |
 |
 |
புழு |
அந்துப்பூச்சி |
|